தமிழ்நாடு

ரயில்வே ஊழியர்கள் சங்கம் வரவேற்பு

2nd Feb 2020 03:41 AM

ADVERTISEMENT

மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வேக்கு சொந்தமான காலி மனைகளில் சூரிய மின்சாரத் திட்டத்தைச் செயல்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று ரயில்வே ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்க துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் வெளியிட்ட அறிக்கை: 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 27 ஆயிரம் கி.மீ. ரயில்வே பாதைகள் மின்மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மின்சார என்ஜின்களை மட்டுமே இயக்கி ஆண்டுக்கு 2,800 மில்லியன் லிட்டர் டீசலையும், எரிபொருள் செலவில் ரூ.13,000 கோடியும் மிச்சப்படுத்தும் நோக்கில் அனைத்து பாதைகளையும் மின்மயமாக்க முடிவு எடுத்து இருக்கிறது. ரயில்வேக்குச் சொந்தமான காலி இடங்களில் சூரிய மின்சாரத் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றார் மனோகரன்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT