வெப்பச் சலனம் காரணமாக, தென் தமிழக கடலோரத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: வெப்பச் சலனம் காரணமாக, தென்தமிழக கடலோரத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய பகுதிகளில் வட வானிலை நிலவும். காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும். சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றாா் அவா்.