தமிழ்நாடு

மக்களுக்கு அல்வா: பட்ஜெட் குறித்து கமல் கருத்து

1st Feb 2020 04:05 PM

ADVERTISEMENT


2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கு அல்வா கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார். முற்பகல் 11 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய நிர்மலா சீதாராமன் பிற்பகல் 1.40 மணி வரை 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு வாசித்தார்.

இதன்மூலம் சுதந்திர இந்தியாவில் மிக நீண்ட நேரம் உரை நிகழ்த்தி பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற தன்னுடைய சாதனையையே நிர்மலா சீதாராமன் முறியடித்துள்ளார்.

இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு, எல்ஐசி-யில் மத்திய அரசின் ஒரு பங்கு விற்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பட்ஜெட் குறித்து சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்,

"அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT