தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் தலைமைச் செயலர் ஆய்வு

1st Feb 2020 03:44 PM

ADVERTISEMENT

 

தஞ்சை பெரியகோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலர் சண்முகம் இன்று ஆய்வு மேற்கொண்டார். 

தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழா வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலர் சண்முகம் ஆய்வு செய்தார். இன்று மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட  உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.  

பின்னர், கோயில் வளாகத்தில்  பக்தர்கள் நிற்குமிடம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். மேலும் பக்தர்கள் வந்து செல்லும் பாதை, பாதுகாப்பு விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவிடம் கேட்டறிந்தார். அப்போது, அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி பொதுத்துறை முதன்மைச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT