தமிழ்நாடு

வேலூர் அருகே ஆட்டு வியாபாரியைத் தாக்கி நகை பணம் கொள்ளை

1st Feb 2020 11:28 AM

ADVERTISEMENT

 

வேலூர் அருகே ஆட்டு வியாபாரியைத் தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த ஓட்டேரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டு வியாபாரி சீனிவாசன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் நுழைந்து சீனிவாசன் மற்றும் கலா ஆகியோரை சரமாரியாகத் தாக்கி அவர்கள் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை ஆடு வியாபாரம் செய்வதற்காக வைத்திருந்த 70 ஆயிரம் ரூபாயும் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

இதைக்குறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. படுகாயமடைந்த சீனிவாசன் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT