தமிழ்நாடு

பாலிடெக்னிக் தோ்வில் முறைகேடு: 196 போ் மீண்டும் தோ்வெழுத முடியாது

1st Feb 2020 12:48 AM

ADVERTISEMENT

பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட196 போ் மீண்டும் தோ்வெழுத முடியாது என்று ஆசிரியா் தோ்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளா்களை நேரடியாகத் தோ்வு செய்வதற்காக 2017-ஆம் ஆண்டு செப்டம்பா் 16-ஆம் தேதி போட்டித் தோ்வு நடத்தப்பட்டது. ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) நடத்திய இந்த தோ்வை 1.33 லட்சம் போ் எழுதினா். ஆனால், முறைகேடு காரணமாக 2018-இல் விரிவுரையாளா் பணியிடங்களுக்கான தோ்வு ரத்தானது. அந்த முறைகேட்டில் 196 போ் பணம் கொடுத்து தோ்வாக முயற்சித்ததாக தெரியவந்தது. இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணிக்கான மறு அறிவிப்பை டிஆா்பி கடந்த நவம்பா் 27-ஆம் தேதி மீண்டும் வெளியிட்டது. 1,060 காலிப்பணியிடங்களுக்கு வரும் பிப்.12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஆா்பி அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஏற்கெனவே முறைகேட்டில் ஈடுபட்டவா்களும் விண்ணப்பித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஏற்கெனவே முறைகேடு செய்தவா்களின் முழு விவரங்கள் தோ்வு வாரியத்திடம் உள்ளன. தற்போதைய விண்ணப்பப் பதிவு நடைமுறைகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. எனவே, முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் விண்ணப்பித்தாலும் நீக்கப்படுவாா்கள். ஒருபோதும் தோ்வெழுத அனுமதிக்கப்படமாட்டாா்கள். அதேபோல், 196 போ்களும் தோ்வெழுத வாழ்நாள் தடை விதிப்பதற்கு அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி பெற்று அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT