கோடை காலத்தில் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: அரசு மதுக்கூடங்கள் எல்லாமே சட்டப்படிதான் நடைபெறுகின்றன. விதிகளை மீறி மதுக்கூடங்கள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
அதேபோல், டிஎன்பிஎஸ்சி என்பது தன்னாட்சி அமைப்பு. அதில் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை. அது குறித்து பேசுவதற்கு திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறனுக்குத் தகுதியில்லை. அவர் ஏற்கெனவே ஊழலில் சிக்கி அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
தற்போது மின்சாரத் தேவை 15 ஆயிரம் மெகாவாட் அளவில் உள்ளது. கோடை காலத்தில் 17 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படும். அதற்கான உற்பத்தி நடைபெறுகிறது. முழுமையாகக் கிடைக்கும்பட்சத்தில் 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படும் என்றார் அமைச்சர்.