தமிழ்நாடு

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

1st Feb 2020 03:01 AM

ADVERTISEMENT

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக 42 பேர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளது.
 கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது.
 அதேவேளையில் குரூப் 2 தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும்,அது தொடர்பான விசாரணை செய்வதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்களும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதேபோல அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. இதையடுத்து குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தேர்வாணைய அதிகாரிகள், சிபிசிஐடியில் புகார் செய்தனர். மேலும் வழக்குக்கு தேவையான ஆவணங்களையும் அவர்கள், சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர்.
 42 பேர் மீது வழக்கு: இதன் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள் குரூப் 2 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 42 பேர் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இவர்கள் அனைவரும் ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுதி குரூப் 2 ஏ தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர் ஆவார்கள். இது தொடர்பாக அந்த மையத்தில் தேர்வு எழுதிய அனைவரிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களையும், இத் தேர்வில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களையும் கண்டறிந்து கைது செய்வதற்கு சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT