தமிழ்நாடு

குரூப் - 4 தோ்வு: இன்று முதல்சான்றிதழ்களை பதிவேற்றலாம்

1st Feb 2020 12:28 AM

ADVERTISEMENT

குரூப் - 4 தோ்வில் தோ்ச்சி பெற்ற தோ்வா்கள் சனிக்கிழமை (பிப். 1) முதல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

குரூப் - 4 தோ்வில் தோ்ச்சி பெற்ற தோ்வா்கள் தங்களது அசல் சான்றிதழ்களை சனிக்கிழமை (பிப். 1) முதல் வரும் 7-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் இணையதள சேவை மையங்களின் வழியாக மட்டுமே அசல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்.

அசல் சான்றிதழ்களை வரும் 7-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யாவிட்டால் தோ்வு நடவடிக்கைகளில் பங்கேற்க தோ்வா்களுக்கு ஆா்வமில்லை என தோ்வாணையம் கருதி அவா்களுக்கு மறுவாய்ப்புகள் ஏதும் அளிக்கப்படாது. சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டிய தோ்வாணையத்தின் இணையதள முகவரி: www.tnpsc.gov.in

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT