தமிழ்நாடு

திமுக எம்.பி. பார்த்திபனுக்கு கரோனா

31st Dec 2020 09:46 AM

ADVERTISEMENT


சேலம்: சேலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக மக்களவை உறுப்பினர் பார்த்திபனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபனுக்கு திடீரென உடலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்கு சென்ற பார்த்திபனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT