தமிழ்நாடு

திருச்சியில் கொட்டும் மழையில் முதல்வர் பேச்சைக் கேட்க காத்திருந்த மக்கள்! 

31st Dec 2020 10:13 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சியில் இரண்டாம் நாளாக பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கேட்க ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி ஏராளமான மக்கள் காத்திருந்தனர். 

திருச்சியில் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.

தேர்தல் பிரசாரத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மழையில் நனைந்தபடியே ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

ADVERTISEMENT

பின்னர், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அமைக்கப்பட்டு இருந்த பிரசார கூட்ட மேடையில் உரையாடினார்.

முதல்வரின் பேச்சைக் கேட்பதற்காக வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் மழையில் நனைந்தபடியே காத்திருந்தனர். விடாது மழை பெய்து வருவதால் மக்கள் அனைவரும் குடை பிடித்தபடி, முதல்வரின்  பேச்சைக் கேட்க காத்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT