தமிழ்நாடு

தமிழக ஆளுநரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

31st Dec 2020 03:05 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில்,  தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் புதிய ஆண்டான 2021 தொடக்கத்தில் இனிமை நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு, வளமான, ஆரோக்கியம் நிறைந்த இந்தியாவையும் தமிழ்நாட்டையும் கட்டியெழுப்பிட உறுதியெடுத்துக் கொள்வோமாக!

நம்மிடையே  புதிய தொடக்கத்தை உருவாக்கிடும் நிகழ்வாகவும், நம் வாழ்வில் தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை பெற்றிடும் வகையில் நமது செயல்பாடுகளைப் புதுப்பித்து புதிய விடியலைக் காணச் தெய்திடவும் இப்புத்தாண்டு வழிவகுத்திட வாழ்த்துகிறேன். அன்பு, மனதுருக்கம், சகிப்புத்தன்மை ஆகிய நற்பண்புகளை நம் உள்ளத்திலே  நிலைபெறச் செய்திடவும், அமைதியையும், நல்லிணக்கத்தையும் உள்ளடக்கிய சிறந்த சமுதாயத்தை  உருவாக்கிடவும், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றிட முன்வரவேண்டும்.

ADVERTISEMENT

புதிய 2021ம் ஆண்டானது ஒவ்வொருவரின் வாழ்விலும், மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவர வாழ்த்துகிறேன். ஒவ்வொருவரின் வாழ்விலும் தனிப்பட்ட விருப்பங்கள் யாவும் நிறைவேறக்கூடிய ஆண்டாகத் திகழ வாழ்த்துகிறேன் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். 
 

Tags : tn new year
ADVERTISEMENT
ADVERTISEMENT