தமிழ்நாடு

புத்தாண்டு பிறந்தது!

31st Dec 2020 11:59 PM

ADVERTISEMENT


ஆங்கிலப் புத்தாண்டு இனிதே 2021-இல் அடியெடுத்து வைத்துள்ளது.

2020-ஐ யாராலும் மறக்க முடியாத அளவுக்கு கரோனா தனது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனாவுக்கு இன்னும் முற்றிலுமாகத் தீர்வு காணாத போதிலும் புதிய நம்பிக்கையுடனும், புத்துணர்ச்சியுடனும் இந்த 2021 பிறந்துள்ளது.

கரோனா இல்லா, துயரங்கள் இல்லா, ஏற்றத்தாழ்வுகள் இல்லா, பாகுபாடுகள் இல்லா, வெறுப்புணர்வு இல்லா அனைவரையும் அரவணைக்கும் வகையில் புத்தாண்டு அமையட்டும்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் சென்னை மெரீனா கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. முக்கிய சாலைகளில் காவல் துறையினர் தடுப்புகளை வைத்து தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

அதேசமயம், தமிழகத்தில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன.

வெறிச்சோடி காணப்பட்டாலும் புத்தாண்டை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள சென்னை நேபியர் பாலம்
Tags : new year
ADVERTISEMENT
ADVERTISEMENT