தமிழ்நாடு

கம்பம், கூடலூர் பகுதிகளில் தாமதமாகத் திறந்த நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகள் நஷ்டம்

31st Dec 2020 05:42 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளில் தாமதமாகத் திறந்த நெல் கொள்முதல் நிலையத்தால் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நெல் அறுவடையின்போது  நெல் மூடைகளை வீடுகளில் சேகரித்துவைக்க முடியாத விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சார்பில் தற்காலிகமாக நெல் கொள்முதல் நிலையம் அமைத்து நெல் கொள்முதல் செய்வது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு முதல் போக சாகுபடி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி அறுவடைக்குத் தயாரான நிலையில் பெரும்பாலான இடங்களில் நெல் அறுவடை பணிகள் முடிந்தன. அறுவடை பணிகள் முடிந்தநிலையில் நெல் கொள்முதல் நிலையம் காலதாமதாக திறக்கப்பட்டது. உரிய காலத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்தனர். இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்தனர். 

ADVERTISEMENT

எனவே வரும் காலங்களில் நெல் அறுவடை துவங்குவதற்கு முன்பே நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். மேலும் நெல் கொள்முதல் நிலையத்தின் பயன்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT