தமிழ்நாடு

கொட்டும் மழையில் குடை வேண்டாம்.. துண்டு போதும்: ஸ்ரீரங்கம் பிரசாரத்தில் அசத்திய முதல்வர்! 

31st Dec 2020 12:02 PM

ADVERTISEMENT

 

திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகவை வெற்றி பெறச் செய்து மீண்டும் அம்மாவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என கொட்டும் மழையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் பழனிசாமி, பாதுகாவலர்களிடம் தனக்கு குடை வேண்டாம், துண்டு போதும் என கூறி துண்டை போர்த்திக் கொண்டு  பிரசாரத்தில் அசத்தி வருகிறார்.

திருச்சி மாவட்டத்தில் இரண்டாம் நாளாக வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார் முதல்வர். காலை முதலே மழை பெய்ததால், ஸ்ரீரங்கத்தில் முதல்வர் மேடையேறி பேசும் போது மழை பெய்தது. அப்போது முதல்வரின் பாதுகாவலர்கள் குடை எடுத்து வந்தனர். அதனை தடுத்த முதல்வர் குடை வேண்டாம் துண்டு எடுத்து வாருங்கள் எனக்கூறி வெள்ளைத் துண்டை வாங்கி போர்த்திக் கொண்டார். மழையில் நனைந்தபடியே 10 நிமிடங்கள் உரையாற்றினார்.

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டத்தில் இரண்டாம் நாளாக வியாழக்கிழமை பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். காலை முதலே மழை பெய்து வருவதால், ஸ்ரீரங்கத்தில் முதல்வர் மேடையேறி பேசும் போது மழை பெய்தது. அப்போது முதல்வரின் பாதுகாவலர்கள் குடை எடுத்து வந்தனர். அதனை தடுத்த முதல்வர் குடை வேண்டாம் துண்டு எடுத்து வாருங்கள் எனக்கூறி வெள்ளைத் துண்டை வாங்கி போர்த்திக் கொண்டு தனது பிரசாரத்தை தொடர்ந்தார். மழையில் நனைந்தபடியே 10 நிமிடங்கள் உரையாற்றினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT