தமிழ்நாடு

புத்தாண்டை வரவேற்கப் பல வண்ண ஓவியங்களில் கேக்குகள்

31st Dec 2020 05:49 PM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இயங்கும் பேக்கரி கடை ஒன்றில் புத்தாண்டை வரவேற்க, கேக்குகளில் பல வண்ண ஓவியங்களை வரைந்து விற்பனை செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டை இளைஞர்களும் இளம் பெண்களும் விரும்பி கொண்டாடி வருகின்றனர். கரோனா  பெருந்தொற்று பரவலால், இந்தாண்டு கேளிக்கை விடுதிகள், மனமகிழ் மன்றங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்துள்ளது.

ADVERTISEMENT

இதனால், நண்பர்களோடு கூடி புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு வழிவகை இல்லாததால், அந்தந்த பகுதியிலேயே கேக் வெட்டி நண்பர்களோடு புத்தாண்டைக் கொண்டாடிய, இளைஞர்களும் இளம்பெண்களும் முடிவு செய்துள்ளனர். வாழப்பாடியில் இயங்கும் ஐயங்கார் கேக் ஷாப் பிரபல பேக்கரி கடையில், புத்தாண்டை வரவேற்கும் வகையிலும், வாடிக்கையாளர்களைக் கவரவும், பல வண்ணங்களில் ஓவியங்கள் வரைந்தும், வண்ணத்துப்பூச்சி, இசைக்கருவிகள்,  உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலும்,  கேக்குகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். இந்த வித்தியாசமான கேக் வகைகள், வாடிக்கையாளரிடையே  நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஐயங்கார் பேக்கரி உரிமையாளர் சுரேஷ்,  கேக் தயாரிப்பு கலைஞர் சிதம்பரம் ஆகியோர் கூறியதாவது: 

புத்தாண்டை இளைஞர்கள் விரும்பி கொண்டாடி வருகின்றனர். எதிலும் புதுமையை விரும்பும் இளைஞர்களை கவரவும், 2021 புத்தாண்டை வரவேற்கவும்,  இந்தாண்டு பல வண்ணங்களில் ஓவியங்கள் வரைந்தும், பல்வேறு வடிவங்களில் கேக்குகள் தயாரித்தும் விற்பனைக்கு வைத்துள்ளோம். என்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT