தமிழ்நாடு

சசிகலா வெளியே வந்தாலும் தமிழக அரசியலில் மாற்றம் இருக்காது: முதல்வர் உறுதி

31st Dec 2020 08:53 PM

ADVERTISEMENT

 

திருச்சி: சசிகலா வெளியே வந்தாலும் தமிழக அரசியலில் மாற்றம் இருக்காது: என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆம் தேதி துவங்கி ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் நாமக்கல் , திருச்சி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சசிகலா வெளியே வந்தாலும் தமிழக அரசியலில் மாற்றம் இருக்காது: என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக வியாழனன்று தனது பரப்புரையில் அவர் பேசும்போது, ‘அதிமுக தலைமையில்தான் தேர்தல் கூட்டணி அமையும். அதனை ஏற்றுக் கொள்பவர்களே கூட்டணியில் இடம்பெறுவார்கள். அதிமுகவின் எதிரிகள் கூறி வருவது போல சசிகலா வெளியே வந்தாலும் தமிழக அரசியலில் மாற்றம் இருக்காது’ என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT