தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் 

30th Dec 2020 11:51 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழகம் முழுவதிலும் திருவாதிரையை முன்னிட்டு சிவ ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் புதன்கிழமை திருவாதிரை முன்னிட்டு சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது

அந்தவகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர் அதன்படி புதன்கிழமை அதிகாலையிலேயே சமூக இடைவெளியுடன் ஆருத்ரா தரிசனம் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் கோயில் முன்பாக காத்திருந்தனர்

இதனைத்தொடர்ந்து வைத்தியநாதசாமி கோவிலில் உள்ள நடராஜருக்கு சுமார் 11 கிலோ சந்தனம் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் நடராஜர் காட்சியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை வைத்தியநாதசுவாமி கோவில் தக்கார் இளங்கோவன் நிர்வாக அதிகாரி ஜவஹர் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT