முதலீடுகளை ஈர்ப்பதில் அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக தமிழகம் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 10 ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 9.4 சதவிகிதம் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்பது தவறானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் செயல்பாட்டு விகிதம் 82.4 சதவிகிதமாக உள்ளது என்றும்,
26,309 புதிய தொழில் நுட்பங்கள், உற்பத்தியை தொடங்க இசைவு ஆணை பெற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நிதியாண்டுகளில் மட்டும் 1,164 உயர் அழுத்த மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.