தமிழ்நாடு

நீடூழி வாழ ரஜினிகாந்திற்கு ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து

30th Dec 2020 05:43 PM

ADVERTISEMENT

 

நடிகர் ரஜினிகாந்த் நீடூழி வாழ வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று புதன்கிழமை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். 

தேனியில் நடைபெற்ற அரசு  நலத்திட்ட உதவிகள்  வழங்கும்  விழாவில்  பங்கேற்ற  அவர், செய்தியாளர்களிடம் கூறியது: திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தார்.  அதை நான் வரவேற்றிருந்தேன். தற்போது அவர் உடல் நலன் கருதி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். 

அவர் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல உடல் நலத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

 சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தை உரிய நேரத்தில், உரிய முறையில் தொடங்குவேன். முதல்வர் வேட்பாளர் குறித்த கருத்தை அதிமுக சார்பில் ஏற்கனவே தெரிவித்து விட்டோம் என்றார் அவர்.
 

ADVERTISEMENT

Tags : Rajinikanth
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT