கிருஷ்ணகிரி அடுத்த காவேரிப்பட்டணம், பெண்னேஸ்வர மடத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெண்னேஸ்வர திருக்கோவில் வளாகத்தில் ஸ்ரீ நந்தீஸ்வரா பம்பை அபிஷேக கலை குழுவின் சார்பில் ஏழாம் ஆண்டு பம்பை அபிஷேக கலைவிழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு எம்.குருமூர்த்தி தலைமை வகித்தார். இந்த விழாவில் கலை பண்பாட்டுத்துறை சேலம் மண்டல பா.ஹேமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பம்பை இசைக்கருவி எண்ணெய், பால், தேன், பன்னீர், இளநீர் குங்குமம், சீக்காய், ஆகியவற்றின் மூலம் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பக்தி பாடல் கலை நிகழ்ச்சி மங்கல இசை நிகழ்ச்சி பம்பை கலைநிகழ்ச்சி அம்மன் நடனம் கோலாட்டம் தப்பாட்டம் கோலாட்டம் கொம்பு வாக்கியம் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி மாடு ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.