தமிழ்நாடு

திருவாடானை அருகே திமுக கிராம சபா கூட்டம்

30th Dec 2020 03:59 PM

ADVERTISEMENT

 

திருவாடானை தெற்கு ஒன்றியம் மாவூர் ஊராட்சியில் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் மற்றும் கையெழுத்து இயக்கம் கிராம சபா கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் திருவாடானை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு மு.சரவணன் தலைமை வகித்தார்.  நிகழ்ச்சிக்கு கழக தணிக்கை குழு உறுப்பினர் வழக்குரைஞர் ஏ.ஆர்.வி காசிநாதன் கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். 

இதில் பொதுக்குழு உறுப்பினர் ஆணிமுத்து  ஒன்றிய துணைத் தலைவர் பாண்டி செல்வி கோடனூர் பஞ்சாயத்து தலைவர் ஆலம்பாடி காந்தி  மாவட்ட பிரதிநிதி கோபால் முருகப்பன்  ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆதியூர் பிரபாகரன் தொண்டர் அணி அமைப்பாளர் மோகன்  மாவூர் முருகேசன் ஆதிதிராவிடர் நலத்துறை ஒன்றிய அமைப்பாளர் அருளானந்து கவுன்சிலர் பிரசாத்,முள்ளிமுனை ஊராட்சி செயலாளர் தூண்டி  தாமரபட்டினம் சக்தி மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு அதிமுகவை நிராகரிப்போம் என்று கோசங்களை எழுப்பினர் மற்றும் ஏராளமான கோரிக்கையை வலியுறுத்தினார்கள் கோரிக்கைகளை தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT