தமிழ்நாடு

சென்னையில் கரோனா பலி 4,000-ஐ நெருங்குகிறது

30th Dec 2020 12:31 PM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ நெருங்குகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,997 ஆக உள்ளது.

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,24,958 ஆக உள்ளது. இவர்களில் 2,18,250 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சென்னையில் கரோனா பாதித்தவர்களில் 2,711 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நல்ல செய்தியாக, அனைத்து மண்டலங்களிலும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 400-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதிகபட்சமாக, கோடம்பாக்கத்தில் 368 பேரும், அண்ணாநகரில் 301 பேரும் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கரோனா பாதிப்பு.. மண்டலவாரியாக..

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT