சங்ககிரி: சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம் கோவில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆரூத்ரா தரிசனத்தையொட்டி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் அருள்மிகு நடராஜர் மற்றும் அருள்மிகு சிவகாமிசுந்தரி அம்மாள் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு புதன்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
இதில் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சிவன் பக்தி பாடல்களை பாடி சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.