தமிழ்நாடு

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ யசோதா மறைவு: முதல்வர் இரங்கல்

27th Dec 2020 07:59 PM

ADVERTISEMENT

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ டி.யசோதா மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகியும், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டி.யசோதா கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் காலமானார்.

ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 4 முறை பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழக காங்கிரஸ் கட்சியில் மூத்த நிர்வாகியான டி.யசோதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 

இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ADVERTISEMENT

இதுகுறித்து முதல்வர் தனது சுட்டுரையில், காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.யசோதா அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். திருமதி.யசோதா அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags : edapadi palanisamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT