தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஆதரவாக கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

27th Dec 2020 12:51 PM

ADVERTISEMENT


கிருஷ்ணகிரி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி தில்லியில் விவசாயிகள் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கிருஷ்ணகிரியில் உள்ள பாத்திமா அன்னை திருத்தலத்தில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தருமபுரி மறைமாவட்டத்தில் உள்ள 38 கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. கத்தோலிக்க சபையானது எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல.

போராடும் விவசாயிகளின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிட்ட வேண்டும் என பிரார்த்தனை நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : Special prayers Catholic churches
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT