உலகின் எடை குறைந்த செயற்கைகோள்களை வடிவமைத்த தஞ்சாவூர் மாணவர் ரியாஸ்தீனை திமுக தலைவர் மு.க.ஸடாலின் பாராட்டியுள்ளார்.
தஞ்சாவூா் கரந்தையைச் சோ்ந்தவா் எஸ். ரியாஸ்தீன் (18). இவா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.டெக். மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் வடிவமைத்துள்ள சிறிய செயற்கைக்கோள் 2021- ஆம் ஆண்டில் நாசா விண்வெளித் தளத்திலிருந்து ஏவப்பட உள்ளது.
இந்த நிலையில் உலகின் எடை குறைந்த செயற்கைகோள்களை வடிவமைத்த தஞ்சாவூர் மாணவர் ரியாஸ்தீனை திமுக தலைவர் மு.க.ஸடாலின் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் சுட்டுரையில், அறிவியல் உலகம் வியந்திடும் வகையில் தஞ்சை மாணவர் ரியாஸ்தீன் உலகின் எடை குறைந்த செயற்கைகோள்களை வடிவமைத்திருக்கிறார்; அவற்றை 2021-ல் நாசா விண்ணில் ஏவுவது இந்தியாவுக்கும் நம் தமிழகத்துக்கும் பெருமிதம் தரும் சாதனை! வாழ்த்துகள்!
உறுதுணையாக இருந்த பெற்றோர்- ஆசிரியருக்கும் பாராட்டுகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.