தமிழ்நாடு

தம்மம்பட்டி மினி பஸ்ஸை ஹெல்மெட் போடாமல் ஓட்டியதாக உரிமையாளருக்கு அபராதம்: மண்ணச்சநல்லூர் போலீசார் ' காமெடி'!

27th Dec 2020 09:29 AM

ADVERTISEMENT


தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் தனியார் மினி பஸ்ஸை, தலைக்கவசம் போடாமல் ஓட்டியதாக, அதன் உரிமையாளருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (40). இவருக்கு சொந்தமான மினி பஸ், தம்மம்பட்டியில் இருந்து செந்தாரப்பட்டி, நரிப்பாடிக்கு இயக்கப்படுகிறது. 

இந்நிலையில், மினி பஸ்சின் தகுதிச்சான்றுக்காக (எஃப்.சி) ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு, நேற்று மினி பஸ்ஸை கொண்டு சென்றார். மோட்டார் வாகன ஆய்வாளரின், ஆய்வின் போது, அந்த மினி பஸ்சிற்கு ( டி.என்.48- எல் 5262)ரூ.100 அபராதம் விதிக்கப்பட்ட இ- சலான் ரசீதுக்கு பணம் கட்டச்சொல்லி உள்ளார். 

ADVERTISEMENT

வாகனத் தகுதிச் சான்றுக்கான, அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்ட நிலையில், இ- சலானில் அபராதமா என, அங்கு கொடுத்த இ-சலானை பார்த்த, கடந்த ஆண்டு, நவம்பர் 24 இல், சரவணன் பைக் ஓட்டிய போது ஹெல்மெட் போடாமல், ஓட்டியதற்கு, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் போலீசார் ரூ.100 அபராதத்தை மினி பஸ்சுக்கு விதித்திருப்பது தெரியவந்தது. 

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் ஓடும் மினி பஸ்சிற்கு, சம்மந்தமே இல்லாமல், திருச்சி மாவட்டத்தில் அபராதமா என, அவர் வேதனையுடன், அதற்கு உரிய அபராத தொகை ரூ. 100-ஐ செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து, மினி பஸ் உரிமையாளர் சரவணன் கூறியதாவது,  "ரூ.100 அபராதம் செலுத்தியும், எஃப்.சி. பார்க்கும் நேரம் முடிந்துவிட்டதாக கூறிவிட்டனர். இன்று (ஞாயிறு) விடுமுறை என்பதால், எனது மினி பஸ்சிற்கு, திங்கள் அன்றுதான், அந்த ரசீதை, தகுதிச்சான்று விண்ணப்பத்துடன், எந்த வித அபராதமும் இல்லை என கிளியரன்ஸ் சான்று இணைத்து அளித்தால், வரும் புதன் அன்றுதான் தகுச்சான்று ( எஃப்.சி) பெற முடியும். 

அதுவரை, மேற்கண்ட வழித்தடத்தில்  பஸ்ஸை இயக்க முடியாது. அதனால், கிராமப் பகுதி மக்கள் சிரமப்படுவார்கள். எனவே, மோட்டார் வாகன ஆய்வாளர், (நாளை) திங்கள் அன்றே மினி பஸ்சிற்கு தகுதிச்சான்று வழங்க வேண்டும் என்றார்.

Tags : Thammampatti minibus மினி பஸ்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT