தமிழ்நாடு

நாமக்கல்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

27th Dec 2020 12:40 PM

ADVERTISEMENT


நாமக்கல்: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாமக்கல் பூங்கா சாலையில் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்-திருச்சி சாலையில் அமைந்துள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தின் அருட் தந்தை ஜான் அல்போன்ஸ் தலைமை வகித்தார். 

இதில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அருட்தந்தையர் பீட்டர் ஜான் பால், செல்வம், பிரான்சிஸ், சேவியர் மற்றும் அருட் கன்னியர்கள், கிறிஸ்தவ மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : protest agricultural laws
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT