தமிழ்நாடு

செந்துறையில் பிரசாரத்தை தொடங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

27th Dec 2020 02:34 PM

ADVERTISEMENT

 

அரியலூர்: அரியலூர் மாவட்டம், செந்துறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருள் தனது தேர்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனர். அதற்கான ஆயுத்த பணிகளை அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியிகள் தொடங்கியுள்ள நிலையில் அரியலூர், ஜயங்கொண்டம், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத்  தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை  நாம் தமிதழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் அண்மையில்  அறிவித்திருந்தார்.

இதையடுத்து குன்னம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருள், தனது தேர்தல் பிரசாரத்தை செந்துறை பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். அவர், இரட்டை மாட்டு வண்டியில் ஏறி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கட்சி நிர்வாகிகளுடன் சென்று, வாக்கு சேகரித்தார்.மாட்டு வண்டியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம்,பருத்தி, கரும்பு போன்றவற்றை வைக்கப்பட்டிருந்தன. 

ADVERTISEMENT

Tags : Naam Thamizhar Katchi campaign
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT