தமிழ்நாடு

ஏற்காடு படகு ஏரியில் ஆண் சடலம்

27th Dec 2020 01:00 PM

ADVERTISEMENT

 

ஏற்காடு:  சேலம் மாவட்டம், ஏற்காடு படகு ஏரியில் ஞாயிறுக்கிழமை ஆண் சடலம் மிகுந்ததனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

ஏற்காடு படகு ஏரியில் ஆண் சடலம் மிகுந்ததை அடுத்து படகுதுறையினர் காவல்துறை, வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சடலம் மீட்கும் பணி நடைபெற்றது. 

படகு ஏரி கரையில் சிவப்பு சட்டையும், லுங்கியும் கிடந்ததால் ஆண் சடலமாக இருக்கலாம் என்றும் மிதந்து கிடந்த சடலத்தை மீட்டு வந்தனர். இறந்தவர் ஏற்காடு ஒண்டிகடை பகுதி காஃபி வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற குட்டப்பன் மகன் சேகர்(53) என்பதும் இவர் சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். நீச்சல் தெரியாத அவர் படகு ஏரியில் குளிக்கச் சென்று இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். 

ADVERTISEMENT

காவல்துறையினர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

Tags : Yercaud boat lake Male corpse
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT