தமிழ்நாடு

ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா? கமல்ஹாசன் கேள்வி

27th Dec 2020 10:31 PM

ADVERTISEMENT

ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா? என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், இதுகாறும் 'அம்மா ஆட்சி' என்றே முழங்கிக்கொண்டிருந்தவர்கள் மீண்டும் புரட்சித் தலைவரின் பெயரைப் புழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். மகிழ்ச்சி. 

எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும் முன்னரே, அவரவர் குவித்த சொத்துக்களுக்கு கணக்கு காட்டச் சொன்னவர் வாத்யார். காட்டுவீர்களா? 

ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்.ஜி.ஆர். ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா?! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

ADVERTISEMENT

Tags : Kamal Haasan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT