தமிழ்நாடு

திண்டுக்கல்லில் சனிப்பெயர்ச்சி வழிபாடு

27th Dec 2020 10:47 AM

ADVERTISEMENT


திண்டுக்கல் சைனடி ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

வாக்கியப் பஞ்சாங்கப்பட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி திண்டுக்கல் சைனடி ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

இதனையொட்டி விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாஜனம், மகா சங்கல்பம், அனுக்ஞ, பூஜை, தேவ பாராயணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சனிப் பெயர்ச்சி யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், அர்ச்சனை நடைபெற்றது.

இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சார் சுகன்யா, சிவாச்சாரியார் கைலாசம் ஆகியோர் செய்திருந்தனர்.
 

Tags : sani peyarchi Dindigul
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT