தமிழ்நாடு

பிரிட்டனில் இருந்து திரும்பியவர்களுடன் தொடர்பில் இருந்து 5 பேருக்கு கரோனா

27th Dec 2020 09:05 AM

ADVERTISEMENT


பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் பிரிட்டன் தொடர்பு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 

பிரிட்டனில் வசித்து வரும் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த ஒருவருக்கு,உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவருடன் நெருக்கமாக இருந்தவா்கள் குறித்த விவரங்களைத் தீவிரமாக சேகரித்து வரும் சுகாதாரத்துறை, புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளை நிபுணா்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனா்.

இதனிடையே, பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா நோய்த்தொற்று, சாதாரண கரோனாவைவிட 70 சதவீதம் அதிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்றும், அந்த நோய்த்தொற்றால்  உடல் நல பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அபாயம் அதிகமில்லை என்றாலும், அதன் தீவிரமாகப் பரவும் தன்மை உடையது என நிபுணா்கள் தெரிவித்துள்ளது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ADVERTISEMENT

இந்நிலையில், பிரிட்டனில் இருந்து தமிழகம் வருவோரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  தமிழகம் வருவோர், அவர்களுடன் விமானத்தில் பயணித்தோர், சந்தித்தோர் என 2391 பேரின் பட்டியலை தயார் செய்தது. அதனடிப்படையில் தமிழகம் திரும்பியவர்களை பரிசோதனை செய்ததில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில், மேலும் 5 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் 4 பேர், தஞ்சாவூரில் 3 பேர், மதுரை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் பிரிட்டன் தொடர்பு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். 

Tags : coronavirus Tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT