தமிழ்நாடு

ஆனைமலையாறு - நல்லாறு இயக்க 100வது பெயர் பலகை திறப்பு விழா

27th Dec 2020 04:34 PM

ADVERTISEMENT

பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள நாத கவுண்டம்பாளையம், கள்ளிப்பாளையம், வடமலை பாளையம், கள்ளி மேட்டுப்பாளையம், வேலப்ப கவுண்டம்பாளையம், துத்தரிப் பாளையம் பகுதியில் ஆனைமலையாறு - நல்லாறு இயக்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

ஆனைமலையாறு - நல்லாறு தண்ணீருக்கான இயக்கத்தின் சார்பில் பல்லடம் அருகேயுள்ள புத்தரச் சலில்  ஆனைமலையாறு - நல்லாறு இயக்க விழிப்புணர்வு 100வது பெயர் பலகையை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் திறந்து வைத்தார் இவ்விழாவிற்கு இயக்க தலைவரும், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க தலைவருமான என்.எஸ்.பி.வெற்றி தலைமை வகித்து பேசுகையில் இத்திட்டத்தை அரசு நிறைவேற்றினால் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விளக்கி பேசினார். இதில் பி.ஏ.பி.பாசன சபை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கே.பி.மணி, மைனர் தங்கவேல், ஆட்டையாம்பாளையம் ஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : திருப்பூர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT