தமிழ்நாடு

டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் மனு

18th Dec 2020 08:42 PM

ADVERTISEMENT

டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 

சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொண்டுள்ள மாநிலங்களைச் சோ்ந்த சில கட்சிகள் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி விண்ணப்பம் செய்திருந்தன. அதன்படி, தமிழகத்தில் அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கி தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தது.

அதில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் டாா்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் எந்த சின்னமும் ஒதுக்கவில்லை. அதேவேளையில் தமிழகத்தில் டாா்ச் லைட் சின்னமானது, எம்.ஜி.ஆா். மக்கள் கட்சி என்ற கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி கடும் அதிருப்தியில் உள்ளது. இந்த நிலையில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. பேட்டரி டார்ச் சின்னத்தை பயன்படுத்துவதைத் தடுக்குமாறும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டி மக்கள் நீதி மய்யம் அந்த ரிட் மனுவில் தெரிவித்துள்ளது .

ADVERTISEMENT

தேர்தல் சின்னங்கள் ( ஒதுக்கீடு) உத்தரவு, 1968 ன் படி வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான சின்னமாக பேட்டரி டார்ச் சின்னத்தை உபயோகிப்பதற்கான உரிமையை மக்கள் நீதி மய்யம் கோரியுள்ளது.இம்மனு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தங்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சி, தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags : Kamal Haasan
ADVERTISEMENT
ADVERTISEMENT