தமிழ்நாடு

கோவையில் கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்கள் மூடல்: தொழிலாளர்கள் வேலை இழந்து தவிப்பு

18th Dec 2020 03:26 PM

ADVERTISEMENT

 

கோவைக்கு பெருமை சேர்க்கும் பல தொழில்களில் முக்கியமானது வெட்கிரைண்டர் தயாரிப்பு கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில் கோலோச்சி வருகிறது.

இந்ததொழில் 1950ஆம் ஆண்டுகளில் மார்க்கெட்டில் கிடைத்த பொருட்களைக் கொண்டு மிக எளிமையாக உருவாக்கப்பட்ட இத்தொழில் இன்று பெரும் விருட்சமாக விரிவடைந்துள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் பெரிய அளவில் இட்லி, தோசை மாவு, தேவைப்படும் உணவகங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த கிரைண்டர்கள் மெல்ல மெல்ல வீட்டுச் சமையல் அறைகளில் இடம் பிடிக்க ஆரம்பித்த உடன் பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

தற்போது அத்தியாவசிய சமையலறை பொருளாக மாறிவிட்டது. கன்வென்ஷனல் மாடல் என்ற ஆரம்ப வடிவமைப்பு தற்போது மாற்றம் பெற்று டில்டிங் என்ற சாய்வு வகை கிரைண்டா்களாக உருவெடுத்துள்ளது.

ADVERTISEMENT

இதை பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் கையாள்வது எளிது மேலும் சமையல் அறையில் அதிக அளவு இடத்தை ஆக்கிரமிப்பு இல்லாமல் அளவு ஊட்டும் வகையில் டேபிள் டாப் கிரைண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன சாதாரண குடிசை முதல் அடுக்கு மாடி குடியிருப்பு வரை இவர்கள் இடம் பிடித்தன.

கொங்கு மண்டலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய தரம் வாய்ந்த கற்களால் இவை உருவாக்கப்படுவதால் வேறு எங்கும் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இத்தொழிலில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் ஈடுபட்டுள்ளனர். கோவையின் அடையாளமாக உள்ள இந்த வெட்கிரைண்டராகளுக்கு  மத்திய அரசின் புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை வெட் கிரைண்டர் மற்றும் உதிரிப் பாகம் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சவுந்தரகுமாா் கூறும்போது,  

காரணமே அறியாமல் நாள்தோறும் உயர்ந்து வரும் மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மத்திய, மாநில அரசுகளின் வரி தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் உற்பத்தி மற்றும் விற்பனையில் பெரிய அடி விழுந்துள்ளது. எங்களால் தொழில் செய்ய முடியவில்லை எங்களிடம் கிரைண்டர் வாங்கி விற்கும் வியாபாரிகளும் விலை நிர்ணயம் செய்ய முடியாத சூழலில் இருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் இந்த தொழில்களை முற்றிலும் மூட வேண்டிய நிலை ஏற்படும் இந்த தொழிலை நம்பியுள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீதிக்கு வந்துவிடும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT