தமிழ்நாடு

பேளூரில் கண் தான விழிப்புணர்வு முகாம்

18th Dec 2020 04:52 PM

ADVERTISEMENT


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வாழப்பாடி அரிமா சங்கம் சார்பில், கண் பாதுகாப்பு மற்றும் கண் தான விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமிற்கு,  வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தார். 

வாழப்பாடி அரிமா சங்க தலைவர் சா.ஜவஹர், செயலாளர் மன்னன், பொருளாளர் பன்னீர்செல்வன், சேவை திட்ட தலைவர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள், கண் புரை அகற்றும் சிகிச்சை மற்றும் அரசு சலுகையில் இலவச கண் லென்ஸ் பொருத்துதல், நீரழிவு நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்தும், கண் தானம் செய்வதால்,  இறந்த பின்பும் உலகை காணும் வாய்ப்பு பெறுதல் குறித்தும், மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், செவிலியர்களும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT