தமிழ்நாடு

பயிர்ச் சேதம் குறைந்து மதிப்பீடு: கோட்டூர் வேளாண்மை அலுவலகம் முற்றுகை

18th Dec 2020 05:21 PM

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட சில கிராமங்களில் நிகழாண்டு பயிர்க் காப்பீட்டுக்கான, பயிர்ச் சேதம் குறித்துக் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து. சரியான மதிப்பீடு செய்ய வலியுறுத்தி, கோட்டூர் வேளாண்மை அலுவலகத்தை , வெள்ளிக் கிழமை விவசாயிகள் முற்றுகையிட்டனர். 

புரெவி புயல் காரணமாக பெய்த தொடர் மழையால், கோட்டூர் ஒன்றியத்தில் சம்பா,தாளடி நெல் பயிர்கள் சேதமடைந்தது. மீனம்பநல்லூர், கீழப்புத்தூர், சீலத்தநல்லூர், கோவில்களப்பால், பட்டமடையான்களப்பால் ஆகிய கிராமங்களின் பயிர்ச்சேத அளவு குறைத்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளது .

இதுகுறித்து, கோட்டூர் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில், விவசாயிகள் விளக்கம்..

ADVERTISEMENT

கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை எனக் கூறி.தங்களுக்கும், மற்ற கிராமங்களுக்கு வழங்கும் அதே அளவு சேதத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கோட்டூர் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை, திமுக ஒன்றிய செயலர் பால.ஞானவேல், சிபிஐ ஒன்றிய செயலர் க. மாரிமுத்து தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் மன்னார்குடி உதவிப் பொறியாளர் விஜயக்குமார் , களப்பால் வேளாண்மை அலுவலர் செல்வம்  ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அந்த அலுவலகத்தில் விவசாயிகள் திரண்டு உள்ளனர். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT