தமிழ்நாடு

சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் வீட்டில் ரூ. 1.37 கோடி, 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

15th Dec 2020 10:39 AM

ADVERTISEMENT

சென்னையில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் கணக்கில் வராத ரூ. 1 கோடி பணம் மற்றும் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து 2 ஆவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற சோதனையில் 1.37 கோடி ரூபாய், 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 7 கோடி ரூபாய் மதிப்புடைய 18 சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் தங்கத்தின் மதிப்பு 1.2 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags : chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT