தமிழ்நாடு

கடையநல்லூரில் அமமுகவினர் கொண்டாட்டம்

15th Dec 2020 12:54 PM

ADVERTISEMENT

 

கடையநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர், புளியங்குடி வாசுதேவநல்லூர், சிவகிரி செங்கோட்டை பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். 

கடையநல்லூரில் மாவட்டச் செயலர் பொய்கை மாரியப்பன் தலைமையில் அக்கட்சியினர் பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணாபுரம் வரை ஊர்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பெருமையாபாண்டியன், இணைச் செயலர் சுமதி கண்ணன், துணைச் செயலாளர் குமரேசன், நகரச் செயலர் கமாலுதீன், ஒன்றிய செயலர் பெரியதுரை ,சார்பு அணி மாவட்ட செயலர்கள் மாரியம்மன் ,ராஜேஷ் ராமசாமி ,நாகலட்சுமி, பால்பாண்டியன், மகேஸ்வரன், சுரேஷ் ,வெங்கடேஸ்வரன் ஒன்றிய செயலர்கள் ராம்குமார், பாலமுருகன், சேது சுப்பிரமணியன், சாமி துரை, நகரச் செயலர் ராமசாமி ,பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் மற்றும் பேரூர் செயலர்கள், ஊராட்சி செயலர்கள், வார்டு செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT