தமிழ்நாடு

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி காத்திருப்புப் போராட்டம்: 80 பேர் கைது

14th Dec 2020 03:36 PM

ADVERTISEMENT

 

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் பி. டில்லிபாபு தலைமை வகித்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் சோ. அர்ஜுனன், மாவட்டத் தலைவர் கே.என். மல்லையன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ. பிரதாபன் உள்ளிட்டோர் பேசினர்.

இப்போராட்டத்தில், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம், விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவை அவசரச் சட்டம், தேசிய மின்சாரத் திருத்தச் சட்டம் ஆகிய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். 

ADVERTISEMENT

புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட வரும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT