தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் குளிக்க நாளை முதல் அனுமதி

14th Dec 2020 03:49 PM

ADVERTISEMENT

குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு நாளை(டிச.15) முதல் அனுமதி வழங்கப் படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு கடந்த மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.  தற்போது கரோனா பரவல் குறைந்த நிலையில் சுற்றுலாத்தலங்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி, குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க நாளை முதல் அனுமதி வழங்கப்படுவதாகவும், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அருவிகளில் குளிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும், சுற்றுலா பயணிகள் குறைந்தபட்சம் 2 மீட்டர் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை சுற்றுலாப் பயணிகள் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : குற்றாலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT