தமிழ்நாடு

பெரியபாளையம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

14th Dec 2020 02:36 PM

ADVERTISEMENT

 

பெரியபாளையத்தில் உயர்மின் அழுத்தம் காரணமாக டிவி, மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருள்கள் பழுதடைந்ததாகக் கிராம மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அம்பேத்கர் நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு அடிக்கடி உயர்மின் அழுத்தம் ஏற்பட்டு வருவதால் அதனைச் சீரமைக்குமாறு பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்றிரவு உயர்மின் அழுத்தம் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டிவி, மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ், மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் தீப்பிடித்து எரிந்து பழுதடைந்தன. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பெரியபாளையம் மின்வாரிய அலுவலகத்தைப் பழுதடைந்த மின்சாதன பொருட்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ADVERTISEMENT

கிராம மக்கள் புகாருக்கு செவிசாய்த்து உடனே மின் அழுத்தத்தைச் சீரமைத்துக் கொடுத்திருந்தால் தங்களது வீடுகளிலிருந்த மின்சாதன பொருட்கள் பழுதடைந்திருக்காது எனக்கூறி மின்வாரிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

சிறிது சிறிதாக சேமித்த பணத்தில் வாங்கிய பொருள்கள் அனைத்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் பழுதடைந்ததாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உயர்மின் அழுத்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT