தமிழ்நாடு

அவிநாசியில் சீரான ஆற்றுக் குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்

14th Dec 2020 04:35 PM

ADVERTISEMENT


அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் ஆற்றுக்குடிநீர் வழங்கக் கோரி  மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வார்டுகளிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு  உள்ளது. இந்நிலையில் இக்குடிநீர் குழாய்களுக்கு வரக் கூடிய மேட்டுப்பாளையம் 2வது திட்டக் குடிநீர் மாதக்கணக்கில் சீராக விநியோகிக்கப்படாததால் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். 

மேலும் இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அனைத்து வார்டு பொதுமக்கள், ஒன்றிணைந்து காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அவிநாசி-சேவூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர், பேரூராட்சி நிர்வாகத்தினர், குடிநீர் வடிகால் வாரியத்தினர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் தொடர் மழை காரணமாகக் குழாய் அடைப்பு, மின் தடை உள்ளிட்ட காரணங்களால் குடிநீர் விநியோகம் தடைப்பட்டது. விரைவில் சரி செய்து முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படும். 

ADVERTISEMENT

தற்போது மூன்று மணி நேரத்திற்குள் குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அவிநாசி-சேவூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளாகிப் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT