தமிழ்நாடு

மனு அளிக்க வந்த மூதாட்டியை நெகிழ வைத்த மதுரை ஆட்சியர்

14th Dec 2020 02:56 PM

ADVERTISEMENT

 

மனு அளிக்க வந்த மூதாட்டியின் நிலைமையைப் பார்த்த மதுரை மாவட்ட ஆட்சியர் அவரை தனது காரில் ஏற்றிச் சென்று வீட்டில் இறக்கி விட்டு வந்தார்.

மதுரை சுயராஜ்ய புரத்தைச் சேர்ந்தவர் பாத்திமா (79). இவர் இப்பகுதியில் ரூபாய் 40 ஆயிரத்துக்கு ஒரு வீட்டை ஒத்திக்கு வாங்கியிருந்தார். ஒத்தி எடுத்தபிறகு தான் அந்த வீட்டில் தண்ணீர் வசதி இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள வேறு வீட்டில் பாத்திமா வாடகைக்கு வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகள் ஒத்தி காலம் முடிந்த பிறகு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது வீட்டின் உரிமையாளர் தர மறுத்துள்ளார். 

வயது முதிர்ந்து கூன்விழுந்த நிலையில் ஆதரவில்லாமல் மிகவும் சிரமப்பட்ட மூதாட்டி இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

ADVERTISEMENT

அவரை பார்த்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன், அவரிடம் என்ன பிரச்னைக்காக வந்திருக்கிறீர்கள் என விசாரித்தார். அவரது மனுவைப் பார்த்த பின்னர், அங்கேயே அமர்ந்து இருக்குமாறு கூறிவிட்டு, தனது அறைக்குச் சென்றார். 

சற்று நேரம் கழித்து அந்த மூதாட்டி இருந்த இடத்துக்கு வந்த ஆட்சியர் தனது காரில் ஏற்றிச் சென்று மூதாட்டி தற்போது வசிக்கும் வீட்டில் இறக்கி விட்டார். பின்னர் அந்த வீட்டிற்குள் சென்று அவருக்கு பழம் பிஸ்கட் போன்றவற்றை வழங்கி கொடுத்து,  அவருக்கு சேர வேண்டிய பணத்தை இன்று மாலைக்குள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையை எதிர்பார்க்காத மூதாட்டி பாத்திமா அவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்.

Tags : petition
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT