தமிழ்நாடு

திருப்பூரில் ரயில் மறியல் முயற்சி: மமகவினர் 58 பேர் கைது

14th Dec 2020 03:43 PM

ADVERTISEMENT

 

தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த 58 பேரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

திருப்பூர் வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி மனிதநேய மக்கள் கட்சியினர் திருப்பூர் மாவட்டத் தலைவர் நசீர்தீன் தலைமையில் ரயில் நிலையம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. 

இந்தப் போராட்டத்தில் ஏர் கலப்பையுடன் பங்கேற்றவர்கள் கூறியதாவது: 

ADVERTISEMENT

தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளைப் பாதிக்கும் 3 புதிய வேளாண் திருத்தச் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றனர். 

இதில், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சித்திக், மாவட்டச் செயலாளர் அபுசாலிஹ், தமுமுக மாவட்டச் செயலாளர் காஜாமைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, ரயில் மறியலுக்கு முயன்ற அக்கட்சியினர் 58 பேரைத் தடுத்து நிறுத்திக் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT