தமிழ்நாடு

விசில் அடித்தால் தண்ணீர் வரும்: கந்தர்வகோட்டை ஆசிரியரின் கண்டுபிடிப்பு 

10th Dec 2020 04:07 PM

ADVERTISEMENT

 

கந்தர்வகோட்டை அருகில் விசில் அடித்தால் தண்ணீர் வரும் ஆசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பால் குடிநீர் வீணாவது தடுக்கப்படுகிறது. 

குடிநீர் தட்டுப்பாடு என்பது நாடு முழுவதும் உள்ள பிரச்னை அந்த குடிநீர் வீணாவதை விசில் மூலமாகத் தீர்த்து வைத்த தனியார்ப் பள்ளி ஆசிரியரைப் பாராட்டும் பொதுமக்கள்.

நாள்தோறும் குடிநீருக்காகப் பெண்கள் குழாயடியில் காத்திருப்பதும் நேரம் கெட்ட நேரத்தில் தண்ணீர் வருவதும், குடிநீர் ஏற்றும் நிலையத்தில் ஏற்படும் கோளாறு, குடிநீர் குழாய் உடைப்பு என குடிநீர் எப்போது வரும் என தெரியாமல் தவித்து வந்தவர்களுக்கு விசில் மூலமாக தீர்வு கண்டுள்ளார். கந்தர்வகோட்டை அருகில் உள்ள அன்டனூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி ஆசிரியர் பாலமுருகன். 

ADVERTISEMENT

புதிய முறையைக் கண்டுபிடித்த தனியார்ப் பள்ளி ஆசிரியர் பாலமுருகன்

இது பற்றி அவர் தெரிவித்து.

எங்கள் ஊரில் குடிநீர் எப்போது திறந்துவிடப்படும் என்பது உறுதியாக தெரியாது, ஒரு சில நாள்கள் விடியல் காலை 3 மணிக்கு கூட குடிநீர் வரும், அப்போது தூக்கத்திலிருக்கும் கிராம மக்களுக்கு இது தெரியாது, காலையில் எழுந்து பார்த்தால் குழியில் தண்ணீர் நிரம்பி குட்டை போல் காட்சியளிக்கும். இதனை எவ்வாறு தடுக்கலாம் குடிநீரைச் சேமிக்கலாம் என யோசித்தப் போது தோன்றியது தான் குடிநீர் குழாயில் விசில் பொருத்தும் யோசனை தோன்றியது. 

பொதுவாகவே தண்ணீர் குழாயில் குடிநீர் வருவதற்கு முன்பாகவே காற்று வரும் அப்படி காற்று வரும் போது இதனை கொண்டு குழாயில் விசில் ஒன்றைப் பொருத்தினேன் காற்றின் மூலமாக விசில் குடிநீர் வருவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பகவே விசில் அடிக்கின்றது, வீட்டிலிருப்பவர்கள் எழுந்து குடிநீரினை பிடிப்பதால் தண்ணீர் வீணாவதும், குடிநீர் பிடிக்காத ஏமாற்றத்தையும் தவிர்க்கமுடியும். மேலும் இந்த முறையைப் பின்பற்றி குடிநீர் வீணாவதைப் பொதுமக்கள் தடுக்கலாம் என்கிறார் ஆசிரியர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT