தமிழ்நாடு

சேலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல்

10th Dec 2020 03:36 PM

ADVERTISEMENT

 

மத்திய அரசின் 3 வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் 3 சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு தரப்பினர் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

அந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் எதிரே உள்ள பெரியார் மேம்பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் இந்த சாலை மறியலில் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

மத்திய அரசின் வேளாண் திட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கம் எழுப்பிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த போராட்டம் காரணமாக பெரியார் மேம்பாலத்தில் போக்குவரத்து தடைப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT