தமிழ்நாடு

மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகள் மூலம் கடைகள்: மாநகராட்சி அறிவிப்பு

10th Dec 2020 07:50 PM

ADVERTISEMENT

 

சென்னை: மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகள் மூலம் கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கரோனா ஊரடங்கின் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்து வந்தது. அதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியதன் காரணமாக, வரும் 14-ஆம் தேதி முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தது.    

இந்நிலையில் மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகள் மூலம் கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகளை கொண்டு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்றும், டிச.21 முதல் 26 வரை அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து ஜனவரி 6-ல் இறுதி செய்யப்படும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT